Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

வரி ஏய்ப்பை ஏற்றுக்கொண்டு அபராதம் செலுத்தப்போகும் ரொனால்டோ

வரி ஏய்ப்பை ஏற்றுக்கொண்டு அபராதம் செலுத்தப்போகும் ரொனால்டோ

வாசிப்புநேரம் -
வரி ஏய்ப்பை ஏற்றுக்கொண்டு அபராதம் செலுத்தப்போகும் ரொனால்டோ

(படம்: AFP/Francisco Leong)

பிரபல காற்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தம்மீது சுமத்தப்பட்ட வரி ஏய்ப்புக் குற்றத்தை ஒப்புக்கொண்டிருக்கிறார்.

ஈராண்டு சிறைத் தண்டனைக்குப் பதிலாக அவர் சுமார் 19 மில்லியன் யூரோவை அபராதமாகச் செலுத்த முன்வந்துள்ளார்.

கடந்த ஆண்டு ரொனால்டோ மீது சுமார் 13 மில்லியன் யூரோ வரி ஏய்ப்பு வழக்குத் தொடுக்கப்பட்டது. ஆனால் அப்போது அவர் அந்தக் குற்றத்தை ஒப்புக்கொள்ள மறுத்தார்.

2011ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டுவரை தம்முடைய நிழற்படங்களைப் பயன்படுத்தியதில் ஈட்டிய தொகைக்கு அவர் வரி செலுத்தவில்லை என்று குற்றஞ்சாட்டப்பட்டது.

ஸ்பெயின் கடந்த ஓராண்டாக காற்பந்தாட்ட வீரர்களின் வரி ஏய்ப்பு தொடர்பில் தீவிர நடவடிக்கை எடுத்துவருகிறது.

ஸ்பானியச் சட்டப்படி, முதல்முறை தண்டனை பெறுவோர், அபராதம் செலுத்தி, சிறையிலிருப்பதைத் தவிர்க்கமுடியும்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்