Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

இந்தியக் கிரிக்கெட் வீரர் டெண்டுல்கர் ஆஸ்திரேலிய நிறுவனத்தின்மீது வழக்குத் தொடுத்துள்ளார்

இந்தியாவின் பிரபல கிரிக்கெட் விளையாட்டாளரான சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் மட்டைகளை உற்பத்தி செய்யும் ஆஸ்திரேலிய நிறுவனத்தின்மீது வழக்குத் தொடுத்துள்ளார்.

வாசிப்புநேரம் -
இந்தியக் கிரிக்கெட் வீரர் டெண்டுல்கர் ஆஸ்திரேலிய நிறுவனத்தின்மீது வழக்குத் தொடுத்துள்ளார்

(படம்: Reuters)

இந்தியாவின் பிரபல கிரிக்கெட் விளையாட்டாளரான சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் மட்டைகளை உற்பத்தி செய்யும் ஆஸ்திரேலிய நிறுவனத்தின்மீது வழக்குத் தொடுத்துள்ளார்.

Spartan Sports International எனும் அந்நிறுவனம் அதன் பொருள்களை விளம்பரம் செய்ய தன்னுடைய பெயர், படம் ஆகியவற்றைப் பயன்படுத்திவிட்டு அதற்குரிய 2 மில்லியன் டாலர் 'royalty' எனப்படும் விளம்பர ஒப்பந்தத் தொகையைக் கொடுக்கத் தவறியதாக டெண்டுல்கர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

2016இல் செய்த ஒப்பந்தத்தின்படி டெண்டுல்கரின் படம், சின்னம், விளம்பரச் சேவைகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி 'Sachin by Spartan' பொருள்களை விற்கும் ஒவ்வோர் ஆண்டும் நிறுவனம் அவருக்கு 1 மில்லியன் டாலர் தொகை செலுத்த வேண்டும்.

ஆனால் 2018 வரை எவ்விதத் தொகையும் பெறாததால் டெண்டுல்கர் அதுகுறித்து அதிகாரபூர்வ கோரிக்கையைப் பதிவு செய்தார்.

அதன்பிறகும் பணம் செலுத்தப்படாததால் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை அவர் முறித்துக்கொண்டார்.

ஆனால் நிறுவனம் தொடர்ந்து அவருடைய பெயரை விளம்பரங்களுக்குப் பயன்படுத்திக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கு ஜூன் 5ஆம் தேதி பதிவு செய்யப்பட்டதாகவும் அது ஜூன் 26ஆம் தேதி விசாரிக்கப்படும் என்றும் நீதிமன்ற இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்