Images
  • doge1
    (படங்கள்: REUTERS/Henry Nicholls)

லண்டன் டென்னிஸ் போட்டியில் பந்து பொறுக்கும் நாய்கள்!

மனிதனுக்கு உற்ற நண்பனாக வர்ணிக்கப்படும் விலங்கு நாய்.

வீட்டில் மட்டுமல்லாது டென்னிஸ் அரங்கிலும் அது சேவை செய்யத் தொடங்கியுள்ளது.

விளையாட்டாளர்களுக்குப் பந்து பொறுக்கும் பையன்கள், சிறுமிகளுக்கிடையே மூன்று நாய்களும் ஓடியாடித் திரிகின்றன.

பாட்டுச் சத்தத்துக்கு இடையே அரங்கத்திற்குள் பாய்ந்துவந்த ஹெட்டி, டீனா, மெல்வின் ஆகியவற்றுக்கு அரங்கத்தில் அமர்க்களமான வரவேற்பு. 


வெற்றியாளர் டென்னிஸ் போட்டியில் பந்து பொறுக்க அவற்றுக்குச் சிறப்புப் பயிற்சி வழங்கப்பட்டிருந்தது.

உடற்குறையுள்ளவர்களுக்கு உதவும் வேலையைச் செய்துவந்த நாய்களுக்கு புதிய பணியை மேற்கொள்ள புதிய திறன்கள் தேவைப்பட்டன.

பேனா, பென்சில் போன்ற பொருட்களைக் கவ்விப் பழக்கப்பட்ட அவற்றுக்கு டென்னிஸ் பந்துகளைக் கவ்வியெடுத்துச் செல்வது சற்று சவாலாகவே இருந்தது.


பயிற்றுவிப்பாளர்கள் பல அரங்குகளுக்கு அவற்றை அழைத்துச் சென்று பந்துகளையும் துண்டுகளையும் பொறுக்கி எடுத்துச் செல்ல தீவிரப் பயிற்சி அளித்தனர்.

அது வீண்போகவில்லை என்பது மேலே உள்ள படங்களைப் பார்த்தாலே புரியும்!  

Top