Images
  • badminton
    படம்: AFP

பூப்பந்து: COVID-19 சூழலிலும் தாய்லந்துப் பொதுவிருதுப் போட்டி தொடரும்

தாய்லந்துப் பொதுவிருதுப் போட்டிகள், தடையின்றித் தொடர்ந்து நடைபெறப் பாதுகாப்பானவை என்று உலகப் பூப்பந்துச் சம்மேளனம் (Badminton World Federation) தெரிவித்துள்ளது.

அதனால், போட்டி தொடர்ந்து நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

போட்டியின் முதல் இரண்டு நாள்களில், 3 பேருக்கு கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டது.

அதைத் தொடர்ந்து, போட்டிகள் தொடருமா என்பது குறித்து கேள்விகள் எழுந்தன.

எகிப்தைச் சேர்ந்த போட்டியாளர் ஒருவர், போட்டியில் இருந்து விலகினார்.

ஜெர்மானியப் பயிற்றுவிப்பாளர் ஒருவரும், பிரெஞ்சு ஊழியர் ஒருவரும் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுத் தற்போது மருத்துவமனையில் உள்ளனர்.

மேலும் மூன்று வீரர்கள், ஏற்கெனவே கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்து பரிசோதனையில் தெரிய வந்தது.

இருப்பினும், அவர்கள் போட்டியில் பங்கேற்கலாம் என்று மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

தற்போது போட்டியில் பங்குபெறும் வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் உள்ளனர்.

வீரர்களுக்குக் கட்டாயமாக மேற்கொள்ளப்படும் COVID-19 பரிசோதனைகள் நாளை இடம்பெறும் என்றும் உலகப் பூப்பந்துச் சம்மேளனம் தெரிவித்தது.

தாய்லந்துப் பொதுவிருதுப் போட்டிகள் பேங்காக்கில் நடைபெற்று வருகின்றன.  

Top