Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

அமெரிக்க குடிமக்களுக்கான ஆக உயரிய விருதைப் பெற்றார் டைகர் ஊட்ஸ்

அமெரிக்க குடிமக்களுக்கான ஆக உயரிய விருதான Presidential Medal of Freedom பதக்கத்தை கோல்ஃப் நட்சத்திரம் டைகர் ஊட்ஸுக்கு (Tiger Woods) வழங்கிச் சிறப்பித்துள்ளார், அதிபர் டோனல்ட் டிரம்ப்.

வாசிப்புநேரம் -
அமெரிக்க குடிமக்களுக்கான ஆக உயரிய விருதைப் பெற்றார் டைகர் ஊட்ஸ்

(படம்: AP Photo/Manuel Balce Ceneta)

(வாசிப்பு நேரம்: 30 விநாடிகள்)

அமெரிக்க குடிமக்களுக்கான ஆக உயரிய விருதான Presidential Medal of Freedom பதக்கத்தை கோல்ஃப் நட்சத்திரம் டைகர் ஊட்ஸுக்கு (Tiger Woods) வழங்கிச் சிறப்பித்துள்ளார், அதிபர் டோனல்ட் டிரம்ப்.

அந்த விருதைப் பெற்றுள்ள ஆக இளைய கோல்ஃப் நட்சத்திரம், 43 வயது ஊட்ஸ்.

கடந்த மாதம் இடம்பெற்ற Masters கோல்ஃப் போட்டியில் ஊட்ஸ் வென்றதைத் தொடர்ந்து, அவருக்கு அந்த விருதை வழங்கப்போவதாக அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார்.

வெள்ளை மாளிகையின் ரோஜா தோட்டத்தில் விருது விழா நேற்று நடைபெற்றது.

ஊட்ஸின் தாயார், இரு பிள்ளைகள், காதலி, கோல்ஃப் விளையாட்டின்போது உதவும் ஊழியர் ஆகியோரும் விழாவில் கலந்துகொண்டனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்