Images
  • tiger woods (1)
    (படம்: REUTERS/Brian Snyder)

டைகர் உட்ஸ் 'நலமாக உள்ளார்'

விபத்துக்குள்ளான பிரபல கோல்ஃப் விளையாட்டு வீரர் டைகர் உட்ஸ் (Tiger Woods) தற்போது நலமாக உள்ளதாய்த் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிகிச்சை வெற்றிகரமாக முடிந்திருப்பதாகவும் அவர் தற்போது குணமடைந்துவருவதாகவும் அவருடைய Twitter பக்கத்தில் தகவல் வெளியிடப்பட்டது.

கடந்த சில நாள்களுக்காக ரசிகர்கள் அளித்த ஆதரவுக்கு உட்ஸும் அவரது குடும்பத்தாரும் நன்றி தெரிவிக்க விரும்புவதாக அதில் குறிப்பிடப்பட்டது.

உட்ஸ் கடந்த செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 23) மோசமான கார் விபத்தில் சிக்கினார்.

அவரது வலது காலில் எலும்பு முறிவும் கணுக்காலில் காயம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.

பின்னர் உட்ஸுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

அவருக்கு ஏற்பட்ட விபத்தைத் தொடர்ந்து விளையாட்டுத் துறையைச் சார்ந்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

அவர் குணமடைய பல விளையாட்டுத்துறைப் பிரபலங்களும் அவரின் ரசிகர்களும் சமூக ஊடகங்களில் வாழ்த்துத் தெரிவித்தனர்.

Top