Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

உலகக் கிண்ணக் காற்பந்து: சாதிக்கக் காத்திருக்கும் தென் கொரியா, இங்கிலாந்து

உலகக் கிண்ணக் காற்பந்து: சாதிக்கக் காத்திருக்கும் தென் கொரியா, இங்கிலாந்து

வாசிப்புநேரம் -

இன்று F, G பிரிவுகளுக்கான உலகக் கிண்ணக் காற்பந்தாட்டங்கள் நடக்கவுள்ளன.

காற்பந்து ஜாம்பவன் இத்தாலியைத் தகுதிச் சுற்றில் வெளியேற்றிய சுவீடன் இன்று தென் கொரியாவுடன் விளையாடவுள்ளது.

இந்த முறை உலகக் கிண்ணத்தை வெல்லக்கூடிய அணிகளில் ஒன்றாக பெல்ஜியம் கருதப்படுகிறது. அது இன்று தனது முதல் ஆட்டத்தில் பனாமாவுடன் பொருதுகிறது.

1966ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்ற இங்கிலாந்து அதற்குப் பின் கிண்ணத்தை வெல்லவில்லை. இன்று அது துனிசியாவைச் சந்திக்கிறது.

F பிரிவின் இரண்டாம் ஆட்டத்தில் சுவீடனுடன் தென் கொரியா மோதவுள்ளது.

G பிரிவின் முதல் ஆட்டத்தில் பெல்ஜியம் பனாமாவைச் சந்திக்கிறது.

G பிரிவின் இரண்டாம் ஆட்டத்தில் இங்கிலாந்தும் துனிசியாவும் பொருதுகின்றன.

ஆட்ட நேர விவரங்கள்:

சுவீடன் - தென் கொரியா ( இரவு: 8 மணி )

பனாமா - பெல்ஜியம் ( இரவு: 11 மணி )

இங்கிலாந்து - துனிசியா ( பின்னிரவு: 2 மணி )
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்