Images
  • Bel eng

உலகக் கிண்ணக் காற்பந்து: மூன்றாவது இடம் யாருக்கு ?

உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் மூன்றாவது இடத்துக்கான ஆட்டம் இன்று சிங்கப்பூர் நேரப்படி இரவு 10 மணிக்கு நடைபெறும்.

ஆட்டத்தில் இங்கிலாந்தும், பெல்ஜியமும் மோதுகின்றன.

இரு அணிகளும் முறையே குரோஷியாவுடனும் பிரான்ஸுடனும் அரையிறுதியில் தோல்வி அடைந்தன.

இரு அணிகளும் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் G பிரிவில் இடம்பெற்றன.

இங்கிலாந்தும், பெல்ஜியமும் மூன்று வாரத்திற்கு முன்னர் மோதிய ஆட்டத்தில் பெல்ஜியம் வெற்றி பெற்றது. ஆனால் இம்முறை வெற்றி யாருக்கு? பொறுத்திருந்து பார்ப்போம்.

நாளை இரவு 11 மணிக்கு உலகக் கிண்ணத்தின் இறுதி ஆட்டத்தில் குரோஷியா பிரான்ஸைச் சந்திக்கிறது.
 

உங்கள் கருத்து

Top