Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

உலகக் கிண்ணக் காற்பந்து: காலிறுதிக்கு முன்னேறுமா பிரேசில்?

இன்று இரண்டாம் சுற்று ஆட்டங்கள் தொடரவுள்ளன.

வாசிப்புநேரம் -

இன்று இரண்டாம் சுற்று ஆட்டங்கள் தொடரவுள்ளன.

இரவு 10 மணிக்கு பிரேசிலுடன் மெக்சிக்கோ மோதவுள்ளது.

பெரிய அணிகள் பல, இம்முறை இரண்டாம் சுற்றில் வெளியேறியதால், பிரேசில் அணி இன்று கூடுதல் கவனமாக ஆடலாம்.

முதல் சுற்று ஆட்டங்களில் பிரேசில் நிலைமைக்கு ஏற்பப் பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

மெக்சிக்கோ ஆரம்பத்தில் நன்றாக விளையாடினாலும், ஆட்டத்தின் இறுதி நிமிடங்களில் பதற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்துவதால், இன்று பிரேசில் அணி வெல்ல வாய்ப்புள்ளது.

பின்னிரவு 2 மணிக்கு ஜப்பான் பெல்ஜியத்தைச் சந்திக்கிறது.

பெல்ஜியம் கடந்த மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று பலமான அணியாகத் திகழ்கிறது.

இந்தமுறை ஆசிய அணிகளில் இரண்டாம் சுற்றுக்குச் செல்லும் ஒரே அணி ஜப்பான்.

ஜப்பான் வேகமாக விளையாடும் திறமையைக் கொண்டிருத்தாலும் பெல்ஜியத்தை வெல்வது சற்று கடினம்தான்.

ஆட்ட நேரம்:

பிரேசில் - மெக்சிக்கோ ( இரவு 10 மணி )

பெல்ஜியம் - ஜப்பான் ( பின்னிரவு 2 மணி )
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்