Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

தோக்கியோ ஒலிம்பிக் போட்டி: வெளிநாடுகளிலிருந்து வரும் அணி நிர்வாகிகள், அதிகாரிகளின் எண்ணிக்கையைப் பாதியாகக் குறைக்கத் திட்டம்

தோக்கியோ ஒலிம்பிக் போட்டி: வெளிநாடுகளிலிருந்து வரும் அணி நிர்வாகிகள், அதிகாரிகளின் எண்ணிக்கையைப் பாதியாகக் குறைக்கத் திட்டம்

வாசிப்புநேரம் -

தோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளின்போது வெளிநாடுகளிலிருந்து வரும் அணி நிர்வாகிகள், அதிகாரிகளின் எண்ணிக்கையைப் பாதியாகக் குறைக்கத் திட்டமிடப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அணி நிர்வாகிகள், அதிகாரிகளின் எண்ணிக்கை தொடர்பாக, ஜப்பானிய அரசாங்கம் விரைவில் பேச்சு வார்த்தையைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எண்ணிக்கை குறைக்கப்பட்டால் சுமார் 30,000 அணி நிர்வாகிகள், அதிகாரிகள் மட்டும்தான் ஜப்பானுக்குள் வரமுடியும் என்று Kyodo செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

ஒலிம்பிக் போட்டி தொடர்பாக ஜப்பானுக்குள் சுமார் 90,000 பேர் நுழைவார்கள்.

அவர்களில் கிட்டத்தட்ட 30,000 பேர் விளையாட்டு வீரர்கள், பயிற்றுவிப்பாளர்களாக இருக்கக்கூடும்.

COVID-19 நோய்ப்பரவல் காரணமாக ஏற்கெனவே வெளிநாடுகளிலிருந்து வரும் ரசிகர்களுக்கும் தொண்டூழியர்களுக்கும் ஜப்பானுக்குள் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

COVID-19 காரணமாக கடந்த ஆண்டு நடக்க வேண்டிய ஒலிம்பிக் போட்டி இந்த ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

போட்டிகள், வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ளன.

-REUTERS 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்