Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

தோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுகள் - தொடக்க விழாவுக்கு முந்திய நிகழ்வுகள் ஆரம்பம்

தோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுகள் - தொடக்க விழாவுக்கு முந்திய நிகழ்வுகள் ஆரம்பம்

வாசிப்புநேரம் -
தோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுகள் - தொடக்க விழாவுக்கு முந்திய நிகழ்வுகள் ஆரம்பம்

படம்: Reuters

தோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் தொடக்கத்துக்கு முந்திய நிகழ்வுகள் ஆரம்பித்துள்ளன.

அதிகாரபூர்வத் தொடக்க நிகழ்ச்சி நாளை மறுநாள் இடம்பெறும்.

அதற்கு முன், ஜப்பானும், ஆஸ்திரேலியாவும் மட்டைப் பந்துப் (softball) போட்டியில் பங்கேற்றுள்ளன.

கிருமிப்பரவல் அபாயத்தைக் குறைப்பதற்காகப் பார்வையாளர்கள் இல்லாமல் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

திட்டமிட்டபடி, தோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை நடத்தி முடிக்க வேண்டும் என்று உலகச் சுகாதார நிறுவனத் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் கெப்ரியேஸஸ் (Tedros Ghebreyesus) விருப்பம் தெரிவித்துள்ளார்.

உலகுக்கு, நம்பிக்கையின் கொண்டாட்டமாக இப்போது ஒலிம்பிக் தேவை என்று கூறிய அவர், கிருமிப்பரவல் காலத்தில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் சாதிக்க முடியும் என்பதை அது எடுத்துக்காட்டுவதாகச் சொன்னார். 

சிங்கப்பூரின் ஒலிம்பிக் கட்டமைப்பாக மீடியாகார்ப், தோக்கியோ 2020 போட்டிகளை மிக விரிவாக உங்களுக்கு வழங்கவிருக்கிறது.
மேல்விவரங்களுக்கு mediacorp.sg/tokyo2020 என்ற இணையத்தளத்தை நாடவும். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்