Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கவிருந்த மேலும் இருவருக்குக் கிருமித்தொற்று-மொத்த எண்ணிக்கை 86 ஆனது

ஒலிம்பிக் போட்டிகளில் பஙகேற்கவிருந்த 2 விளையாட்டாளர்களுக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கவிருந்த மேலும் இருவருக்குக் கிருமித்தொற்று-மொத்த எண்ணிக்கை 86 ஆனது

(படம்: AFP/Charly Triballeau)

ஒலிம்பிக் போட்டிகளில் பஙகேற்கவிருந்த 2 விளையாட்டாளர்களுக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

புதிதாக 11 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இதுவரை ஒலிம்பிக் விளையாட்டுகளுடன் தொடர்புடைய மொத்தம் 86 பேருக்குக் கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆண்கள் காற்பந்துப் பிரிவில், இன்று ஜப்பானும் தென்னாப்பிரிக்காவும் பொருதவிருக்கின்றன.

ஆனால், தென்னாப்பிரிக்க அணியைச் சேர்ந்த குறைந்தது மூவருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அவர்களில் இருவர் காற்பந்தாட்டக்காரர்கள்.

அணியைச் சேர்ந்த 18 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இப்படிப்பட்ட நிலையில், ஒரு முழு அணியை களத்தில் இறக்க, தென்னாப்பிரிக்கா போராடி வருகிறது.

இருப்பினும் ஆட்டம் நடக்கவேண்டும் என்ற நோக்கில்,13 விளையாட்டாளர்களை அது அணி திரட்டியுள்ளது.

ஆட்டம் தொடங்குவதற்கு 6 மணி நேரத்துக்கு முன்பாக, அவர்கள் அனைவரும் சுகாதார நெறிமுறைகளுக்கு உட்படுத்தப்படுவர். 

-Reuters

சிங்கப்பூரின் ஒலிம்பிக் கட்டமைப்பாக மீடியாகார்ப், தோக்கியோ 2020 போட்டிகளை மிக விரிவாக உங்களுக்கு வழங்கவிருக்கிறது.
மேல்விவரங்களுக்கு mediacorp.sg/tokyo2020 என்ற இணையத்தளத்தை நாடவும். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்