Images
  • yang qian
    (படம்: AFP/Tauseef Mustafa)

தோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் முதல் தங்கப் பதக்கத்தை வென்றார் சீனாவின் யாங் சியென்

தோக்கியோ ஒலிம்பிக் போட்டியில், முதல் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார் சீனாவின் 21 வயது யாங் சியென் (Yang Qian).

குறி சுடும் வீராங்கனையான அவர், 10 மீட்டர் மகளிர் பிரிவில் தங்கத்தைத் தட்டிச் சென்றார்.

ரஷ்யாவின் அனஸ்தேசியா கலாஷினாவுக்கு (Anastasiia Galashina) வெள்ளி.

சுவிட்சர்லந்தின் நீனா கிரிஸ்டன் (Nina Christen) வெண்கலம் வென்றார்.

இதற்கிடையே, தோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வீரர்களில் மேலும் ஒருவருக்குக் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவரையும் சேர்த்து, ஒலிம்பிக் தொடர்பில் நோய்த்தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை 17க்கு உயர்ந்துள்ளது.

தோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளை நேரடியாக meWATCH தளத்தின் 14 பிரத்தியேக ஒளிவழிகளில் காணலாம்.

meWATCH.sg/tokyo2020 என்ற இணையப்பக்கத்தை நாடுங்கள்; சிங்கப்பூரின் ஒலிம்பிக் கட்டமைப்பான மீடியாகார்ப்புடன் இணைந்திருங்கள்!

-Agencies 

Top