Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

தோக்கியோ ஒலிம்பிக் போட்டியை நடத்த அனைவரும் தீர்மானமாக உள்ளனர்: அனைத்துலக ஒலிம்பிக் குழு

தோக்கியோ ஒலிம்பிக் போட்டியை நடத்த அனைவரும் தீர்மானமாக உள்ளனர்: அனைத்துலக ஒலிம்பிக் குழு

வாசிப்புநேரம் -
தோக்கியோ ஒலிம்பிக் போட்டியை நடத்த அனைவரும் தீர்மானமாக உள்ளனர்: அனைத்துலக ஒலிம்பிக் குழு

(படம்: REUTERS/Dado Ruvic/Illustration)

தோக்கியோ ஒலிம்பிக் போட்டியை நடத்த அனைவரும் தீர்மானமாக உள்ளதாக அனைத்துலக ஒலிம்பிக் குழுவின் தலைவர் தாமஸ் பாக் (Thomas Bach) தெரிவித்துள்ளார்.

போட்டியின் தொடக்க விழாவை எதிர்பார்த்து விளையாட்டு அமைப்புகள் அனைத்தும் ஆவலாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

COVID-19 காரணமாக கடந்த ஆண்டு நடக்க வேண்டிய ஒலிம்பிக் போட்டி இந்த ஆண்டிற்கு ஒத்திவைப்பட்டுள்ளது.

போட்டிகளை வரும் ஜூலை மாதம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு இன்னும் 6 மாதங்களே உள்ளன.

நிலைமை இன்னும் சீராகாத காரணத்தால் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ள நேரத்தில் திரு. பாக்கின் கருத்து வெளியாகியுள்ளது.

ஜப்பானிய அரசாங்கமும் போட்டியை நடத்தியே தீர வேண்டும் என்று ஒரே முடிவாக உள்ளது.

நாட்டில் நோய்ப்பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர அது அவசரநிலை, கடுமையான கட்டுப்பாடுகள் எனப் பல நடவடிக்கைகளை எடுத்தும் வருகிறது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்