Images
  • Sport

தோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள்: மேடைகள், பதக்கங்கள் மறுபயனீட்டுப் பிளாஸ்டிக்கில்!

தோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றியாளர் மேடைகள் மறுபயனீட்டுப் பிளாஸ்டிக்கால் செய்யப்படும் என்று போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜப்பானிய வீடுகளில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளும், கடற்கரையில் ஒதுங்கிய பிளாஸ்டிக் கழிவுகளும் மறுபயனீடு செய்யப்பட்டு மேடைகளாக உருவாக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.

வரும் 13ஆம் தேதியிலிருந்து 2,000க்கும் மேற்பட்ட இடங்களில் மக்கள் பிளாஸ்டிக் கழிவுகளை ஒப்படைக்கலாம்.

போட்டி ஏற்பாட்டாளர்கள் 45 டன் பிளாஸ்டிக்கைச் சேகரிக்கபோவதாகவும், அதன்மூலம் 100 மேடைகளை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறினர்.

இம்முறை ஒலிம்பிக் போட்டிகளில் மின்னியல் பொருள்கள் மூலம் மறுபயனீடு செய்த பதக்கங்கள் வழங்கப்படவிருக்கின்றன. 

Top