Images
  • Olympics
    படம்: AFP / Charly Triballeau

நோய்த்தொற்று இருந்தாலும் சரி, இல்லை என்றாலும் சரி.. தோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் நடந்தே தீரும்: அனைத்துலக ஒலிம்பிக் குழு

COVID-19 நோய்த்தொற்று இருந்தாலும் சரி, இல்லை என்றாலும் சரி.. அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்ட தோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் நடந்தே தீரும் என்று அனைத்துலக ஒலிம்பிக் குழுவின் துணைத்தலைவர் ஜான் கோட்ஸ் (John Coates) தெரிவித்துள்ளார்.

நோய்த்தொற்றை வென்று விளையாட்டுகள் நடத்தப்படும் என்று அவர் உறுதிகூறினார்.

ஒலிம்பிக் போட்டிகள் இதற்கு முன்னர் உலகப்போர் காரணமாக மட்டுந்தான் நிறுத்தப்பட்டன.

அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்ட தோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் திட்டமிட்டபடி நடக்கும் என்று கோட்ஸ் தெரிவித்தார்.

நோய்த்தொற்றுக்கான தடுப்பூசிகளைக் கண்டுபிடிக்க உலகநாடுகள் போராடி வருகின்றன.

தடுப்பூசி எப்போது கிடைக்கும் என்பது இன்னமும் பெரிய கேள்வியாக உள்ளது.

அதுபோக, உலகில் சில இடங்களில் இரண்டாம் மூன்றாம் கட்ட நோய்ப்பரவல் ஏற்பட்டுவருவதால் ஒலிம்பிக் போட்டிகள் தொடர்பான கேள்விகள் அவ்வப்போது எழுப்பப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டு ஜூலை மாதம் நடக்கவேண்டிய ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா கிருமிப்பரவல் காரணமாக அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. 

Top