Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

'தோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் எளிமையாகவும் பாதுகாப்பாகவும் நடைபெற வேண்டும்'

 'தோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் எளிமையாகவும் பாதுகாப்பாகவும் நடைபெற வேண்டும்'

வாசிப்புநேரம் -

தோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் எளிமையாகவும் பாதுகாப்பாகவும் நடைபெற வேண்டும் என்று, அனைத்துலக ஒலிம்பிக் குழுவின் மூத்த அதிகாரி ஜான் கோட்ஸ் (John Coates) தெரிவித்துள்ளார்.

போட்டிக்கான ஏற்பாடுகளில், வீரர்களுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்கித் தருவதில் அதிக அக்கறை இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

COVID-19 நோய்ப்பரவல் காரணமாக, இம்மாதம் நடந்து கொண்டிருக்க வேண்டிய ஒலிம்பிக் போட்டிகள், அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டுப் போட்டிக்காக ஏற்பாடு செய்யப்பட்ட 42 இடங்களும், அடுத்த ஆண்டு விளையாட்டுகள் நடைபெறுவதற்கும் உறுதி செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சியான செய்தி என்று ஜான் கோட்ஸ் கூறினார்.

போட்டி ஒத்திவைக்கப்பட்டதால் நேர்ந்துள்ள நிதி இழப்பை ஈடுகட்ட, போட்டிகளை எளிமையாக நடத்த வேண்டும் என்றார் அவர்.

நோய்த்தொற்று உலக நாடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதால், ஒலிம்பிக் போட்டிகள் குறித்து மீண்டும் கேள்வி எழுந்துள்ளது.

தோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை அடுத்த ஆண்டு நடத்தியே தீரவேண்டும் என்பதில் ஜப்பானிய அரசு தீவிர முனைப்புக் காட்டிவருகிறது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்