Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

தோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளின் போது கிருமிப்பரவலை முறியடிக்கும் வழிமுறைகள் குறித்து ஜப்பானிய அரசாங்கக் குழு ஆலோசனை

தோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளின் போது கிருமிப்பரவலை முறியடிக்கும் வழிமுறைகள் குறித்து ஜப்பானிய அரசாங்கக் குழு ஆலோசனை

வாசிப்புநேரம் -
தோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளின் போது கிருமிப்பரவலை முறியடிக்கும் வழிமுறைகள் குறித்து ஜப்பானிய அரசாங்கக் குழு ஆலோசனை

படம்: AFP / Charly Triballeau

ஒலிம்பிக் போட்டிகளை அடுத்த ஆண்டு நடத்தும்போது கிருமிப்பரவலை முறியடிக்கும் வழிமுறைகள் குறித்து ஜப்பானிய அரசாங்கக் குழு ஆலோசனை நடத்தியுள்ளது.

ஒலிம்பிக் போட்டிகளை எவ்வாறு பாதுகாப்பாய் நடத்துவது என்பதன் தொடர்பில் இந்த ஆண்டு இறுதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.

அதற்கு முன்னர், உலகில் பெரிய அளவில் விளையாட்டு நிகழ்ச்சிகள் எவ்வாறு நடத்தப்படுகின்றன என்பது பற்றி ஆராய்ந்து தகவல்கள் பெறப்படும்.

அடுத்த ஆண்டு ஜூலையில், போட்டிகளை நடத்தும்போது, கிருமிப்பரவல் முற்றாக ஒழிக்கப்பட்டிருக்காது என்று என்று ஜப்பானிய அரசாங்கமும், ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழுவும் எண்ணுகின்றன.

ஆனால், ஒலிம்பிக் போட்டிகளை நடத்த, கிருமித்தொற்றுத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படுவது முக்கியமான காரணமாய் இருக்காது என்பதை அதிகாரிகள் தெளிவுபடுத்தினர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்