Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

தோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டி: நுழைவுச் சீட்டுகளின் விற்பனை தொடக்கம்

தோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளுக்கான நுழைவுச் சீட்டுகளின் விற்பனை இன்று தொடங்கியது.

வாசிப்புநேரம் -
தோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டி: நுழைவுச் சீட்டுகளின் விற்பனை தொடக்கம்

(படம்: AFP/Kazuhiro NOGI)

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

தோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளுக்கான நுழைவுச் சீட்டுகளின் விற்பனை இன்று தொடங்கியது.

தொடக்க விழாவுக்கான நுழைவுச்சீட்டுகளின் விலை 23 டாலரில் இருந்து 2,730 டாலர் வரை.

100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தை முன் வரிசையில் இருந்து பார்க்க 1,200 டாலர்...

ஜப்பானில் வசிப்போர் போட்டிகளைக் குடும்பத்துடனும் கண்டுகளிக்கச் சிறப்பு விலையில் நுழைவுச் சீட்டுகள் விற்கப்படுகின்றன.

பிள்ளைகள், மூத்தோர், உடல்குறையுள்ளோருக்கும் சலுகைகள் உண்டு.

அது மட்டுமல்ல ஜப்பான்வாசிகளுக்கு அதிர்ஷ்டக் குலுக்கின் மூலம் போட்டியைக் காணும் வாய்ப்பும் உள்ளது.

தோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 24ஆம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்