Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

அர்ஜென்டினா மகளிர் காற்பந்து அணியில் முதலாவது திருநங்கை வீராங்கனை

அர்ஜென்டினாவின் மகளிர் வெற்றியாளர் (Championship) போட்டியில் களம் இறங்கிய முதல் திருநங்கை என்ற பெருமையைப் பெற்றுள்ளார் காற்பந்து விளையாட்டாளர், மாரா கோமெஸ் (Mara Gomez).

வாசிப்புநேரம் -
அர்ஜென்டினா மகளிர் காற்பந்து அணியில் முதலாவது திருநங்கை வீராங்கனை

(படம்: AFP/JUAN MABROMATA)

அர்ஜென்டினாவின் மகளிர் வெற்றியாளர் (Championship) போட்டியில் களம் இறங்கிய முதல் திருநங்கை என்ற பெருமையைப் பெற்றுள்ளார் காற்பந்து விளையாட்டாளர், மாரா கோமெஸ் (Mara Gomez).

பாலினம் குறித்த எவ்விதத் தடையும் இன்றிக் காற்பந்து விளையாட்டில் முன்னேற விரும்புவதாக மாரா கூறியிருக்கிறார்.

பெண்கள் அணியில் விளையாட அனுமதிக்கப்பட்டது குறித்து, அவர் பெருமகிழ்ச்சி தெரிவித்தார்.

"இது ஒரு தனிப்பட்ட வெற்றி அல்ல, இது ஒட்டுமொத்தத் திருநங்கை சமூகத்துக்கும் உரித்தானது" என்று 23 வயதான மாரா AFP செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

அர்ஜென்டினாவில், திருநங்கைகளின் சராசரி ஆயுள்காலம் 32 வயது முதல் 40 வயதுவரைதான்.

அந்தக் குறுகிய ஆயுளுக்குள், பல சாதனைகளைச் செய்ய விரும்புகிறார் மாரா.
நீண்ட போராட்டத்திற்குப் பிறகு,
மகளிர் பிரிவில் விளையாட, சென்ற மாதம் 28ஆம் தேதியன்று மாரா அனுமதி பெற்றார்.

லானஸ் எனும் அர்ஜென்டின விளையாட்டுக் கழகத்தின் மேல்சட்டை (ஜெர்சி) மாராவுக்குப் பரிசாக வழங்கப்பட்டது.

அதில், பிரபலக் காற்பந்து நட்சத்திரம் மரடோனாவுக்குரிய எண் 10, இடம்பெற்றுள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்