Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

காற்பந்து: UEFA சாம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை 6ஆம் முறையாக வென்ற பயர்ன் மியுனிக்

காற்பந்து: UEFA சாம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை 6ஆம் முறையாக வென்ற பயர்ன் மியுனிக்

வாசிப்புநேரம் -
காற்பந்து: UEFA சாம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை 6ஆம் முறையாக வென்ற பயர்ன் மியுனிக்

படம்: AFP

ஜெர்மனியின் பயர்ன் மியுனிக் (FC Bayern München) அணி இந்த ஆண்டின் UEFA சாம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை வென்றுள்ளது.

இன்று அதிகாலை 3 மணிக்கு நடந்த போட்டியின் இறுதி ஆட்டத்தில் பயர்ன் மியுனிக் அணியும் பிரான்ஸின் பாரிஸ் செயிண்ட் ஜெர்மைன் அணியும் மோதின.

விறுவிறுப்பாக நடந்த அந்த ஆட்டத்தில் பயர்ன் மியுனிக் அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் கிண்ணத்தை வென்றது.

ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் ஏதும் புகுத்தவில்லை.

இரண்டாம் பாதியின் 59-ஆவது நிமிடத்தில் பயர்ன் மியுனிக் அணி ஒரு கோலைப் புகுத்தியது.

பாரிஸ் செயிண்ட் ஜெர்மைன் அணியில் நெய்மார், கிலியோன் ம்பப்பே (Kylian Mbappe), ஏங்கல் டி மரியா (Ángel Di María) போன்ற நட்சத்திர வீரர்கள் இருந்தபோதும் அது கிண்ணத்தைக் கைப்பற்றத் தவறியது.

UEFA சாம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை பயர்ன் மியுனிக் அணி வென்றது இது 6ஆவது முறை.

இந்த பருவத்தின் UEFA கிண்ணத்துக்கான எல்லா ஆட்டங்களிலும் பயர்ன் மியுனிக் வெற்றிக் கனியைச் சுவைத்தது.

காற்பந்து அணி ஒன்று, பருவத்தின் அனைத்து ஆட்டங்களிலும் வெற்றிபெற்றது இதுவே முதல்முறை.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்