Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

உசேன் போல்ட் ஆஸ்திரேலியாவில் காற்பந்து விளையாடக்கூடும்

ஒலிம்பிக் ஓட்டப்பந்தயத்தில் 8 முறை தங்கப் பதக்கம் வென்ற உசேன் போல்ட் (Usain Bolt) சோதனை அடிப்படையில் ஆஸ்திரேலியாவில் காற்பந்து விளையாட பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

வாசிப்புநேரம் -
உசேன் போல்ட் ஆஸ்திரேலியாவில் காற்பந்து விளையாடக்கூடும்

(படம்: AFP/Thomas SAMSON)

ஒலிம்பிக் ஓட்டப்பந்தயத்தில் 8 முறை தங்கப் பதக்கம் வென்ற உசேன் போல்ட் (Usain Bolt) சோதனை அடிப்படையில் ஆஸ்திரேலியாவில் காற்பந்து விளையாட பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

31 வயது போல்ட், ஆஸ்திரேலியாவின் A-League போட்டியைச் சேர்ந்த Central Coast Mariners குழுவோடு ஆறு வாரம் விளையாட பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

பேச்சுவார்த்தை சீராக நடந்தால் ஒரு பருவத்துக்கு அந்தக் குழுவோடு காற்பந்து விளையாடுவார் போல்ட்.

ஜெர்மனி, நார்வே, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளிலுள்ள காற்பந்துக் குழுக்களுடன் ஏற்கனவே பயிற்சி செய்துள்ளார் போல்ட்.

முழுநேரக் காற்பந்தாட்டக்காரராக ஆக விரும்புவதாக போல்ட் முன்னர் தெரிவித்திருந்தார்.

ஒப்பந்த மதிப்பு மில்லியன் கணக்கான டாலர் என்று ஆஸ்திரேலியச் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சோதனையின் அடிப்படையிலான ஒப்பந்தம் பிறகு நீட்டிக்கப்படக்கூடும் என்று Central Coast Mariners குழுவின் தலைமை நிர்வாக அதிகாரி கூறினார்.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்