Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

வெற்றிக் கதைகள் - ஓடி ஓடி மக்கள் மனம் வென்ற ஒலிம்பிக் நாயகன் உசைன் போல்ட்

வெற்றிக் கதைகள் - ஓடி ஓடி மக்கள் மனம் வென்ற ஒலிம்பிக் நாயகன் உசைன் போல்ட்

வாசிப்புநேரம் -

தோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் இன்னும் சில வாரங்களில் தொடங்கவுள்ளன.

COVID-19 நோய்ப்பரவலால் துவண்டு போகாமல் இருக்க சில விளையாட்டு நட்சத்திரங்களின் வெற்றி கதைகளை ஒலிம்பிக்ஸ் குழு, தனது இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் பதிவு செய்து வருகிறது.

"செய்தி" ரசிகர்களுக்காக அவை, தமிழில்....

உசைன் போல்ட் - ஓட்டப்பந்தய வீரர்

  • கரீபியத் தீவான ஜமைக்காவில் 1986 ஆம் ஆண்டு பிறந்தார்.
  • சிறு வயதிலிருந்தே விளையாட்டில் அதிக ஆர்வம்.
  • கிரிக்கெட் போட்டியின் போது போல்ட்டின் ஓட்டத்தைக் கண்டு அவரது பயிற்றுவிப்பாளர் மிரண்டார்.
  • போல்ட்டை உடனடியாக ஓட்டப்பந்தயத்தில் கவனம் செலுத்தச் சொன்னார்.
  • பயிற்சியில் தீவிரமாக இறங்கினார் போல்ட்.

  • வயது 15. 2002ஆம் ஆண்டு உலக ஜூனியர் வெற்றியாளர் கிண்ணப் போட்டியில் 200 மீட்டர் ஓட்டத்தில் போல்ட்டுக்குத் தங்கம்.
  • 2004 ஆம் ஆண்டு ஏதன்ஸ் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றார்.
  • ஆனால் காயம் காரணமாக 200 மீட்டர் ஓட்டத்தின் முதல் சுற்றிலேயே வெளியேறினார்.
  • தோல்வியால் என்றும் துவண்டதில்லை போல்ட். ஜமைக்கா திரும்பிய அவர் அயராது உழைத்தார்.


  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்