Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

Nations League காற்பந்து இறுதிச் சுற்றில் வீடியோ துணை நடுவர் தொழில்நுட்பம் - UEFA

போர்ச்சுகலில் இவ்வாரம் நடைபெறவிருக்கும் நேஷன்ஸ் லீக் 

வாசிப்புநேரம் -
Nations League காற்பந்து இறுதிச் சுற்றில் வீடியோ துணை நடுவர் தொழில்நுட்பம் - UEFA

(படம்: REUTERS/Denis Balibouse)

போர்ச்சுகலில் இவ்வாரம் நடைபெறவிருக்கும் நேஷன்ஸ் லீக்
(Nations League) காற்பந்து இறுதிச் சுற்றில் வீடியோ துணை நடுவர் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என்று UEFA எனும் ஐரோப்பியக் காற்பந்துச் சங்கம் தெரிவித்திருக்கிறது.

ஆட்டங்களில் நேரும் சம்பவங்களை வீடியோ வழி மறுஆய்வு செய்ய அந்தத் தொழில்நுட்பம் உதவுகிறது.

கடந்த ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியிலும் இந்தப் பருவத்தின் சாம்பியன்ஸ் லீக் தொடக்கக் கட்டத்திலும் அது பயன்படுத்தப்பட்டது.

இங்கிலீஷ் பிரிமியர் லீகிலும் அடுத்த பருவத்திலிருந்து வீடியோ துணை நடுவர் தொழில்நுட்பம் கையாளப்படவிருக்கிறது.

நேஷன்ஸ் லீக் போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ள போர்ச்சுகல், இங்கிலாந்து, சுவிட்சர்லந்து, நெதர்லந்து ஆகிய குழுக்களின் பயிற்றுவிப்பாளர்களுக்கு அந்தத் தொழில்நுட்பம் குறித்து UEFA விளக்கமளித்துள்ளது.

போட்டியில் அதன் பயன்பாட்டை இங்கிலாந்து நிர்வாகி கேரத் சவுத்கேட் வரவேற்றுள்ளார்.

அந்தத் தொழில்நுட்பம் 100 விழுக்காடு நம்பகமானதாக இல்லாவிட்டாலும் முக்கிய முடிவுகளை எடுப்பதில் அது பெரிதும் உதவுவதாக அவர் குறிப்பிட்டார்.

ஆனால் நெதர்லந்துப் பயிற்றுவிப்பாளர் ரொனால்டோ கோமென், அது இன்னும் மேம்படுத்தப்படலாம் என்றார்.

முடிவுகளை மறுஆய்வு செய்வதற்கு வீடியோ துணை நடுவர் தொழில்நுட்பம் அதிக நேரம் எடுத்துக்கொள்வதாகக் குறை கூறப்படுகிறது.

நடுவர் வீடியோவைப் பார்க்கும் வேளையில் அரங்கில் உள்ள ரசிகர்களுக்கு என்ன நடக்கிறது என்பது தெரிவதில்லை என்றும் சொல்லப்படுகிறது.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்