Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

நீர்ப்பந்து அணியின் விளையாட்டு உத்திகளை மறுஆய்வு செய்யவேண்டும் - முன்னாள் தேசிய விளையாட்டாளர்கள்

தென்கிழக்காசிய விளையாட்டுகளின் நீர்ப்பந்துப் போட்டியில் சிங்கப்பூர் அணி தங்கப் பதக்கத்தைத் தவற விட்டது குறித்து முன்னாள் தேசிய விளையாட்டாளர்கள் தங்கள் ஏமாற்றத்தைத் தெரிவித்துள்ளனர்.

வாசிப்புநேரம் -
நீர்ப்பந்து அணியின் விளையாட்டு உத்திகளை மறுஆய்வு செய்யவேண்டும் - முன்னாள் தேசிய விளையாட்டாளர்கள்

(படம்: AFP/WAKIL KOHSAR)

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

தென்கிழக்காசிய விளையாட்டுகளின் நீர்ப்பந்துப் போட்டியில் சிங்கப்பூர் அணி தங்கப் பதக்கத்தைத் தவற விட்டது குறித்து முன்னாள் தேசிய விளையாட்டாளர்கள் தங்கள் ஏமாற்றத்தைத் தெரிவித்துள்ளனர்.

அணியின் விளையாட்டு உத்திகளை மறுஆய்வு செய்யவேண்டும் என அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

27 முறை தொடர்ச்சியாக நீர்ப்பந்துப் போட்டியில் தங்கம் வென்ற சிங்கப்பூரை நேற்று முன்தினம் இந்தோனேசியா வென்றது.

தென்கிழக்காசிய விளையாட்டுகளின் வரலாற்றில் சிங்கப்பூர் அடைந்த முதல் தோல்வி அது.

அதைத் தொடர்ந்து, அடுத்த நாளே பிலிப்பீன்ஸுடன் மோதிய சிங்கப்பூர், ஆறுக்கு ஆறு என்ற கோல் கணக்கில் சமநிலை கண்டதால் தங்கம் வெல்வதற்கான வாய்ப்பை அது இழந்தது.

இது, முன்னாள் விளையாட்டாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

நாளை சிங்கப்பூர், தாய்லந்தைச் சந்திக்கும். பிலிப்பீன்ஸ் மலேசியாவுடன் பொருதும்.

அந்த ஆட்டங்களின் முடிவுகள், சிங்கப்பூர் வெள்ளிப் பதக்கம் வெல்லும் வாய்ப்பை நிர்ணயிக்கும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்