Images
  • WC REP PH
    ( படம்; REUTERS/Christian Hartmann )

"ஆகச் சிறந்த உலகக் கிண்ணப் போட்டி" கூறுவது....

இதுவரை நடந்த உலகக் கிண்ணப் போட்டிகளில் தற்போது நடந்து வரும் போட்டிதான் ஆகச்சிறந்தது என அனைத்துலகக் காற்பந்துச் சம்மேளனத்தின் தலைவர் ஜியானி இன்ஃபேன்டினோ (Gianni Infantino) தெரிவித்துள்ளார்.

அதற்கு அவர் சில காரணங்களையும் முன்வைத்துள்ளார். அவர் கூறியது.....

  • ரஷ்யாவை பற்றிய சில மோசமான தகவல்கள் இந்த உலகக் கிண்ணப் போட்டியை ஏற்று நடத்தியதன் மூலம் பொய்த்துவிட்டன.
  • 4 மில்லியன் மக்கள்தொகையை கொண்ட குரோஷியா முதல்முறையாக உலகக் கிண்ணத்தின் இறுதி ஆட்டத்திற்கு முன்னேறியுள்ளது.
  •  இந்தமுறை பல சிறிய அணிகள் பலம்வாய்ந்த அணிகளுக்கு அதிக சவால் கொடுத்தன. போர்ச்சுகல், அர்ஜென்ட்டினா, மெக்சிக்கோ போன்ற பெரும் அணிகள் இரண்டாவது சுற்றிலேயே வெளியேறின. அப்படி நடப்பது இதுவே முதல்முறை.
  • இந்த ஆண்டு வீடியோ துணை நடுவர் தொழில்நுட்பத்தின் உதவியால் நடுவர்கள் துல்லியமான முடிவுகளைக் கொடுத்துள்ளனர். இதனால் ஆட்டங்களில் நேர்மையான அணுகுமுறை இருந்தது.

 

உங்கள் கருத்து

Top