Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகள்: எதிர்பார்ப்பை நிறைவேற்றுமா இங்கிலாந்து?

இன்று உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் இரண்டாவது அரையிறுதி ஆட்டம் பின்னிரவு 2 மணிக்கு நடக்கவிருக்கிகிறது.

வாசிப்புநேரம் -
உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகள்: எதிர்பார்ப்பை நிறைவேற்றுமா இங்கிலாந்து?

( படம்: Gleb Garanich / Reuters )

இன்று உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் இரண்டாவது அரையிறுதி ஆட்டம் பின்னிரவு 2 மணிக்கு நடக்கவிருக்கிகிறது.

அதில் இங்கிலாந்தும் குரோஷியாவும் மோதவுள்ளன.

வெற்றிபெறும் அணி இறுதியாட்டத்தில் பிரான்ஸை சந்திக்கும்.

இந்த உலகக் கிண்ணப் போட்டியில் இங்கிலாந்து இதுவரை ஆடிய ஆட்டங்களில் முதல் சில நிமிடங்களிலேயே கோல் போட்டுள்ளது.

அணித் தலைவர் ஹேரி கேன் அணியை சிறப்பாக வழிநடத்திவருகிறார்.

காலிறுதி ஆட்டத்தில் கோல்காவலர் ஜோர்டான் பிக்ஃபர்ட் மிகச் சிறப்பாக விளையாடினார்.

குரோஷியா, ஒரு குழுவாக முன்னேறிவந்துள்ளது.

அணியில் பல நட்சத்திர விளையாட்டாளர்களும் உள்ளனர்.

குரோஷியாவின் மிகப் பெரும் பலம் லுக்கா மொட்ரிக்;

ஆட்டத்தைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதில் அவர் கில்லாடி.

எந்த அணிக்கு வெற்றி? பொறுத்திருந்து பார்ப்போம்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்