Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

வெம்ப்ளி விளையாட்டரங்கில் வன்முறை - FIFA கண்டனம்

வெம்ப்ளி விளையாட்டரங்கில் வன்முறை - FIFA கண்டனம்

வாசிப்புநேரம் -

இங்கிலாந்தின் வெம்ப்ளி விளையாட்டரங்கில் ரசிகர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்திற்கு அனைத்துலகக் காற்பந்துச் சம்மேளனம் ( FIFA) கண்டனம் தெரிவித்துள்ளது.

நேற்றிரவு இங்கிலாந்தும் ஹங்கேரியும் வெம்ப்ளி விளையாட்டரங்கில் பொருதின.

அப்போது ஹங்கேரி ரசிகர்கள் வன்செயலில் ஈடுபட்டதால் காவல்துறையினருக்கும் அவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

அந்தச் சம்பவத்தை ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்று என FIFA கூறியது.

நேற்று நடந்த மற்றோர் ஆட்டத்திலும் இதுபோன்ற சம்பவம் நடந்தது.

அல்பேனியாவும் போலந்தும் விளையாடிய ஆட்டத்தின்போது போத்தல்கள் மைதானத்திற்குள் வீசப்பட்டன.

போட்டிகளின்போது நடந்த அந்தச் செயல்கள் குறித்து விசாரணைனயத் தொடங்கியுள்ளது FIFA.

விளையாட்டரங்கில் வன்முறை, இனவாதம், அச்சுறுத்தல் போன்ற செயல்கள் இடம்பெறுவதை எப்போதும் சகித்துக்கொள்ள முடியாது என்றும் அது கூறியது.

-Reuters
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்