Images
  • world cup 2018
    படம்: REUTERS/Maxim Shemetov

உலகக் கிண்ணக் காற்பந்து துவக்க விழாவில் என்னென்ன எதிர்பார்க்கலாம் ?

உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளின் துவக்க விழாவுக்கு எப்போதுமே அதிக முக்கியத்துவம் உண்டு.

வித்தியாசமான கலை நிகழ்ச்சிகள், வாணவேடிக்கைகள், தலைசிறந்த இசைக் கலைஞர்களின் நேரடி இசைப் படைப்புகள் என சொல்லிக்கொண்டே போகலாம்.

இந்தமுறையும் ரஷ்யாவில் நடைபெறும் துவக்க விழாவுக்கென்றே பல சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எப்போது தொடங்கும்?

சிங்கப்பூர் நேரப்படி இன்று இரவு 10.30 மணிக்குத் தொடங்கும். அதைத் தொடர்ந்து 11 மணிக்கு ரஷ்யாவும் சவுதி அரேபியாவும் முதல் போட்டியில் சந்திக்கவுள்ளன.

இடம்: மாஸ்கோவின் லஷ்நிக்கி விளையாட்டரங்கம்

என்ன எதிர்பார்க்கலாம்:

இம்முறை துவக்க விழாவில் இசைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

500க்கு மேற்பட்ட நடனக் கலைஞர்கள், சீருடற்பயிற்சியாளர்கள், Trampoline கலைஞர்கள் ஆகியோர் பலவிதமான நிகழ்ச்சிகளைப் படைக்கவுள்ளனர்.

பிரபல பாப் இசைக் கலைஞரான ராபி வில்லியம்ஸ் விளையாட்டரங்கில் திரளும் 80,000திற்கும் மேற்பட்ட ரசிகர்களுக்கு முன்னால் இசைத் தொகுப்புகளை அரங்கேற்றவுள்ளார்.

சிங்கப்பூர் ரசிகர்கள் துவக்க விழாவையும் முதல் போட்டியையும் Mediacorp OKTO ஒளிவழியில் இலவசமாகப் பார்த்து ரசிக்கலாம்.

நீங்கள் காற்பந்து ரசிகராக இருந்தால் அடுத்து வரும் 32 நாட்கள் உங்களுக்குக் கொண்டாட்டம்தான்.


Top