Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

வெற்றிக் கதைகள் - போலியோவை வென்று மின்னல் வேகத்தில் ஓடிச் சாதித்த வில்மா

வெற்றிக் கதைகள் - போலியோவை வென்று மின்னல் வேகத்தில் ஓடிச் சாதித்த வில்ம

வாசிப்புநேரம் -
வெற்றிக் கதைகள் - போலியோவை வென்று மின்னல் வேகத்தில் ஓடிச் சாதித்த வில்மா

படம்: AFP

தோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் இன்னும் சில நாள்களில் தொடங்கவுள்ளன.

COVID-19 நோய்ப்பரவலால் துவண்டு போகாமல் இருக்க சில விளையாட்டு நட்சத்திரங்களின் வெற்றிக் கதைகளை வெளியிட்டு வருகிறது Olympics இன்ஸ்டாகிராம் பக்கம்.

"செய்தி" ரசிகர்களுக்காக அவை தமிழில்...

வில்மா ருடால்ப் (Wilma Rudolph)

விளையாட்டு: ஓட்டப் பந்தயம்

நாடு: அமெரிக்கா

பிறந்த ஆண்டு : 1940

ஒலிம்பிக் பதக்கம்: 3 தங்கம், 1 வெண்கலம்

  • துணிவே துணை என்பதை உலகுக்கு உரக்கச் சொல்லியவர் வில்மா ருடால்ப்.
  • குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தை வில்மா. அவரது கால்கள் பின்னர் போலியோவால் பாதிக்கப்பட்டன.
  • மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த அவருக்கு 20 உடன்பிறப்புகள்.
  • உணவு என்பது கூட கனவாக இருந்தது சில வேளைகளில்.
  • கறுப்பினத்தவரான அவருக்கு, அந்த காலக்கட்டத்தில் போதிய மருத்துவ வசதிகள் கூட சரியாகக் கிடைக்கவில்லை.
படம்: AP Images

(படம்: Ap Images)

  • வில்மா நடக்கத் தடுமாறிய போது அவருக்குச் சில அமைப்புகள் துணைநின்றன.
  • கால்களில் காப்புகள் போட்டு நடக்கத் தொடங்கினார்.
  • தொடர் சிகிச்சைகளுக்கு பிறகு 12 வயதில் கால்களில் காப்புகள் இல்லாமல் நடந்தார்.
  • இன்னல்கள் எல்லாவற்றையும் வெற்றிகளாக மாற்ற வில்மா மின்னலாக ஓடத் தொடங்கினார்.

(படம்: AFP)

படம்: AFP

  • கூடைப்பந்து விளையாட்டின் போது வில்மாவின் ஓட்டத்தை கண்ட பயிற்றுவிப்பாளர்கள் ஆச்சரியத்தில் வாய் பிளந்தனர்.
  • ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்ள அவருக்கு வாய்ப்புக் கொடுக்கப்பட்டது.
  • வாய்ப்பைச் சரியாக பயன்படுத்திக்கொண்ட அவர் 16 வயதில் ஒலிம்பிக் போட்டியில் களமிறங்கினார்.
  • 1956 ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் 4 × 100 தொடர் ஓட்டத்தில் வெண்கலம் வென்றார்.
  • 1960 ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் புயல் போல் பாய்ந்தார்.
  • 100, 200 மீட்டர் ஓட்டப்பந்தயங்களிலும் 4 x 100-தொடர் ஓட்டத்திலும் வில்மா தங்கம் வென்று, உலகைத் திரும்பி பார்க்கச் செய்தார்.
  • 1962 ஆம் ஆண்டு விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்ற வில்மா ஏழை எளிய மக்களுக்கு உதவத் தொடங்கினார்.
  • வசதி இல்லாதவர்களுக்கு பயிற்சி கொடுக்கும் பயிற்றுவிப்பாளராகவும் மாறினார்.
  • ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு பெரும் ஊக்கமாக இன்றளவும் விளங்குகிறார் வில்மா.

சிங்கப்பூரின் ஒலிம்பிக் கட்டமைப்பாக மீடியாகார்ப், தோக்கியோ 2020 போட்டிகளை மிக விரிவாக உங்களுக்கு வழங்கவிருக்கிறது.
மேல்விவரங்களுக்கு mediacorp.sg/tokyo2020 என்ற இணையத்தளத்தை நாடவும்.   

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்