Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

COVID-19: இந்த ஆண்டின் விம்பிள்டன் பொதுவிருது போட்டிகள் ரத்து

உலகில் COVID-19 கிருமித்தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து இந்த ஆண்டின் விம்பிள்டன் பொதுவிருது டென்னிஸ் போட்டிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
COVID-19: இந்த ஆண்டின் விம்பிள்டன் பொதுவிருது போட்டிகள் ரத்து

படம்: REUTERS/Toby Melville

உலகில் COVID-19 கிருமித்தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து இந்த ஆண்டின் விம்பிள்டன் பொதுவிருது டென்னிஸ் போட்டிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு முதல் முறையாக விம்பிள்டன் பொதுவிருது டென்னிஸ் போட்டிகள் ரத்து செய்யப்படுகின்றன.

ஜூன் 29 முதல் ஜூலை 12ஆம் தேதி வரை இந்த ஆண்டின் போட்டிகளை நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது.

அவற்றை, அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்கு நடத்துவதாக ஏற்பாட்டுக்குழு தெரிவித்தது.

கிருமித்தொற்று காரணமாக அனைத்து டென்னிஸ் போட்டிகளும் ஜூலை 13ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாகவும் உலக டென்னிஸ் சம்மேளனம் கூறியது.

அடுத்த மாதம் நடக்க வேண்டிய பிரெஞ் ஓப்பன் (French Open) போட்டிகள் செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்