Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

விம்பிள்டன் பொதுவிருது டென்னிஸ் : 9ஆவது முறையாக விருதை வெல்வாரா ஃபெடரர்?

விம்பிள்டன் ஆண்கள் ஒற்றையர் பொதுவிருது டென்னிஸ் இறுதியாட்டத்தில் நட்சத்திர வீரர்கள் ரோஜர் ஃபெடரரும் (Roger Federer), நோவாக் ஜோக்கோவிச்சும் (Novak Djokovic) மோதுகின்றனர்.

வாசிப்புநேரம் -
விம்பிள்டன் பொதுவிருது டென்னிஸ் : 9ஆவது முறையாக விருதை வெல்வாரா ஃபெடரர்?

படம்: REUTERS

விம்பிள்டன் ஆண்கள் ஒற்றையர் பொதுவிருது டென்னிஸ் இறுதியாட்டத்தில் நட்சத்திர வீரர்கள் ரோஜர் ஃபெடரரும் (Roger Federer), நோவாக் ஜோக்கோவிச்சும் (Novak Djokovic) மோதுகின்றனர்.

ஆட்டம் சிங்கப்பூர் நேரப்படி இன்றிரவு 9 மணிக்குத் தொடங்கவிருக்கிறது.

இந்த ஆட்டத்தை ஃபெடரர் வென்றால் விம்பிள்டன் விருதை அவர் 9ஆவது முறையாகக் கைப்பற்றுவார்.

ஆனால் கடந்த ஆண்டின் விம்பிள்டன் வெற்றியாளரான ஜோக்கோவிச்சை வெல்வது எளிதான செயல் அல்ல.

அண்மைக் காலமாக ஜோக்கோவிச் போட்டிகளை எளிதில் வென்றுவருவதால் இன்றையப் போட்டியில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விம்பிள்டன் இறுதியாட்டத்தில் கடைசியாக இருவரும் 2015இல் மோதினர், அதில் ஜோக்கோவிச் வென்றார்.



விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்