Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

டென்னிஸ்: விம்பிள்டன் ஆடவர் இறுதிப் போட்டியில் நோவாக் ஜோக்கோவிச்

விம்பிள்டன் ஆடவர் இறுதிப் போட்டியில் செர்பியாவின் நோவாக் ஜோக்கோவிச்சும் தென்னாப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சனும் (Kevin Anderson) பொருதவுள்ளனர்.

வாசிப்புநேரம் -
டென்னிஸ்: விம்பிள்டன் ஆடவர் இறுதிப் போட்டியில் நோவாக் ஜோக்கோவிச்

( படம் :AFP/Nic Bothma)

விம்பிள்டன் ஆடவர் இறுதிப் போட்டியில் செர்பியாவின் நோவாக் ஜோக்கோவிச்சும் தென்னாப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சனும் (Kevin Anderson) பொருதவுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமையன்று அரையிறுதி ஆட்டத்தில் ஜோக்கோவிச்சும் ஸ்பெயினின் ரஃபாயல் நடாலும் (Rafael Nadal) பொருதினர்.

அன்று ஆட்ட நேரம் முடிந்ததால், அது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

நேற்று மீண்டும் தொடங்கிய அந்த ஆட்டத்தில் இரு விளையாட்டாளர்களும் விட்டுக்கொடுக்காமல் ஆடினர்.

இறுதியில் ஐந்தாவது செட்டில் ஜோக்கோவிச் நடாலை வீழ்த்தி ஆட்டத்தை வென்றார்.

செட் விவரம்:

6 - 4

3- 6

7 - 6

3- 6

10 - 8

விம்பிள்டன் மகளிருக்கான இறுதிப் போட்டியில் ஜெர்மனியின் ஏஞ்சலிக் கர்பரும் (Angelique Kerber) அமெரிக்காவின் செரினா வில்லியம்சும் மோதினர்.

அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய கெர்பர் எளிதாக செரினாவை வீழ்த்தி பட்டத்தை வென்றார்.

செட் விவரம்:

6-3

6-3
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்