Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

பெண்கள் உலகக் கிண்ணப் போட்டிக்கு எதிர்பாரா விதமாக அமோக ஆதரவு

பெண்கள் உலகக் கிண்ணக் காற்பந்தாட்டத்திற்கான நுழைவுச் சீட்டுகளின் விற்பனை எதிர்பாரா விதமாகச் சூடுபிடித்துள்ளது.

வாசிப்புநேரம் -
பெண்கள் உலகக் கிண்ணப் போட்டிக்கு எதிர்பாரா விதமாக அமோக ஆதரவு

(படம்: AFP/PATRICK HERTZOG)

பெண்கள் உலகக் கிண்ணக் காற்பந்தாட்டத்திற்கான நுழைவுச் சீட்டுகளின் விற்பனை எதிர்பாரா விதமாகச் சூடுபிடித்துள்ளது.

ஒவ்வோர் உலகக் கிண்ணத்தின்போதும் விளையாட்டரங்கை நிரப்புவதற்காகப் பாடுபடும் ஏற்பாட்டாளர்களுக்கு இது ஓர் இன்ப அதிர்ச்சி.

52 ஆட்டங்களுக்கு வழங்கப்படும் 1.3 மில்லியன் நுழைவுச் சீட்டுகளில் சுமார் 720,000 சீட்டுகள் விற்கப்பட்டுவிட்டன.

போட்டியின் தொடக்க ஆட்டத்திலும், அரையிறுதிச் சுற்று, இறுதிச் சுற்று ஆட்டங்களிலும் 48 மணிநேரத்திலேயே நுழைவுச் சீட்டுகள் விற்றுமுடிந்தன.

அவற்றை வாங்கி உலகக் கிண்ணப் போட்டிக்கு ஆதரவு தெரிவித்தவர்களில் வெளிநாட்டு ரசிகர்கள் அதிகம்.

ஒரு மாதம் முழுதும் இடம்பெறும் பெண்கள் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி அடுத்த மாதம் பாரிசில் தொடங்கவிருக்கிறது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்