Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

2027ஆம் ஆண்டின் மகளிர் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியைக் கூட்டாக ஏற்று நடத்த 3 ஐரோப்பிய நாடுகள் விருப்பம்

2027ஆம் ஆண்டின் மகளிர் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியைக் கூட்டாக ஏற்று நடத்த 3 ஐரோப்பிய நாடுகள் விருப்பம்

வாசிப்புநேரம் -

2027ஆம் ஆண்டின் மகளிர் உலகக் கிண்ணக் காற்பந்து போட்டியைக் கூட்டாக ஏற்று நடத்த பெல்ஜியம், ஜெர்மனி, நெதர்லந்து ஆகிய நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன.

போட்டியை ஏற்று நடத்துவது குறித்து ஏற்கெனவே FIFA என்னும் அனைத்துலகக் காற்பந்துச் சம்மேளனத்திடம் பேசியுள்ளதாக மூன்று நாடுகளும் கூறின.

ஆண்டு இறுதிக்குள் அதன் தொடர்பில் முறையான ஒப்பந்தத்தைத்தை உருவாக்கப் போவதாக அந்த 3 நாடுகளின் காற்பந்துச் சங்கங்கள் வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

கடைசியாக மகளிர் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி கடந்த ஆண்டு பிரான்ஸில் நடந்தது.

2023ஆம் ஆண்டுப் போட்டியை ஆஸ்திரேலியாவும், நியூஸிலந்தும் கூட்டாக ஏற்று நடத்துகின்றன.

ஜெர்மனி இதற்கு முன்னர் 2011ஆம் ஆண்டு மகளிர் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியை நடத்தியது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்