Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

விளையாட்டுத் துறையில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க உலகத் தடகள அமைப்பு உறுதி

விளையாட்டுத் துறையில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க உலகத் தடகள அமைப்பு உறுதியளித்துள்ளது.

வாசிப்புநேரம் -

விளையாட்டுத் துறையில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க உலகத் தடகள அமைப்பு உறுதியளித்துள்ளது.

இன்று அனைத்துலக மகளிர் தினம் அனுசரிக்கப்படுவதால், WeGrowAthletics என்ற முழக்கவரியின் கீழ் அமைப்பு அதன் உறுதிமொழிகளை வெளியிட்டுள்ளது.

பெண்களைத் தலைமைப் பொறுப்புகளுக்கு உயர்த்துவது, மரபுகளை உடைத்து அவர்கள் முன்னேற உதவுவது போன்றவற்றில் அமைப்பு கவனம் செலுத்தவுள்ளது.

2019 இல், உலகத் தடகள அமைப்பின் முதல் துணைத் தலைவராக ஒரு பெண் தேர்வு செய்யப்பட்டார்.

2027க்குள் அமைப்பின் உறுப்பினர்களில் 50 விழுக்காட்டினர் பெண்களாக இருக்கத் திட்டமிடப்படுகிறது.

2022 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடக்கவுள்ள உலகத் தடகளப் போட்டியின் இறுதி நாளின் கடைசிப் போட்டி பெண்கள் பங்கேற்கும் விளையாட்டாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

எப்போதும் இறுதி நாளின் கடைசிப் போட்டி ஆண்கள் பங்கேற்கும் விளையாட்டாகத்தான் இருக்கும். ஆனால் அந்த வழக்கம் மாற்றப்படவுள்ளது.

Reuters
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்