Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

உலகக் கிண்ணம் - கடந்த 5 இறுதிச் சுற்றுகள் ஒரு பார்வை

உலகக் கிண்ண காற்பந்து 2018இன் இறுதி ஆட்டத்தில் இன்று (ஜூலை 15) பிரான்ஸும் குரோசியாவும் (France, Croatia) மோதவுள்ளன.

வாசிப்புநேரம் -
உலகக் கிண்ணம் - கடந்த 5 இறுதிச் சுற்றுகள் ஒரு பார்வை

(படம்: Wikipedia)

இறுதி ஆட்டத்திற்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கும் வேளையில் சிறிது பின்நோக்கிச் செல்வோம்.

உலகக் கிண்ணக் காற்பந்து முதன்முதலில் 1930இல் தொடங்கப்பட்டது.

1930இல் நடந்த அந்த முதல் உலகக் கிண்ணம் உருகுவே (Uruguay) தலைநகர் மொண்டெவிடேயோவில் (Montevideo)
இடம்பெற்றது.

சரித்திரத்தில் முதல் உலகக் கிண்ணத்தின் வெற்றியாளர்களாக ஆகி தங்கள் நாட்டுக்குப் பெருமை சேர்த்தது உருகுவே குழு.

அன்றிலிருந்து போட்டி ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கும் இடம்பெற்று வருகிறது.

1942லும் 1946லும் இரண்டாம் உலகப் போர் காரணமாக அந்த வழக்கம் தடைபட்டது.

கடந்த ஐந்து உலகக் கிண்ண இறுதிச் சுற்று விவரங்கள்:

   

  

ஆண்டு  ஆட்டம்  இடம்பெற்ற நாடு போட்டியிட்ட குழுக்கள் வெற்றிபெற்ற குழு

1998

பிரான்ஸ் பிரான்ஸ், பிரேஸில் பிரான்ஸ்
2002  ஜப்பான்  ஜெர்மனி, பிரேஸில்  பிரேஸில்
2006    ஜெர்மனி இத்தாலி, பிரான்ஸ் இத்தாலி
2010   சவுத் ஆப்பிரிக்கா நெதர்லந்து, ஸ்பெயின்  ஸ்பெயின்
2014   பிரேஸில்  ஆர்ஜெண்டினா, ஜெர்மனி ஜெர்மனி 


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்