Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

சீனாவைச் சேர்ந்த ஆருடம் சொல்லும் பூனை மாண்டுபோனது

சீனாவைச் சேர்ந்த ஆருடம் சொல்லும் பூனை நோய்வாய்பட்டு மாண்டுபோனது.

வாசிப்புநேரம் -
சீனாவைச் சேர்ந்த ஆருடம் சொல்லும் பூனை மாண்டுபோனது

(படம்: Weibo)


சீனாவைச் சேர்ந்த ஆருடம் சொல்லும் பூனை நோய்வாய்பட்டு மாண்டுபோனது.

உலகக் கிண்ண விளையாட்டுகளின் 6 முடிவுகளைச் சரியாகக் கணித்ததால் அந்தப் பூனை மிகவும் பிரபலமானது.

பூனை மாண்டது பற்றி பலர் இணையத்தளங்களில் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

பெய்ஜிங் அரண்மனை அரும்பொருளகத்தைச் சுற்றி அந்தத் தெருப் பூனை அலைந்து திரிந்தது.

இரண்டு தட்டு சோறு கொடுத்தால் போதும், உலகக் கிண்ண போட்டிகளின் முடிவுகளை அது சரியாக கணித்துச் சொன்னது.

அதைத் தொடர்ந்து அந்தப் பூனைக்கென்று சமூக வலைத்தளங்களில் கணக்குகள் தொடங்கப்பட்டன.

நோயுற்றிருந்த பூனை மாண்டதாக அரண்மனை அரும்பொருளகம் அறிவித்தது. அதைத் தொடர்ந்து பலரும் சமூக வலைத்தளங்களில் அனுதாபம் தெரிவித்து வருகின்றனர்.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்