Images
  • World Cup Devices
    (படம்: REUTERS/Hannah McKay)

உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளைக் காணச் செல்லும்போது மின்னியல் சாதனங்கள் வேண்டாம்: அமெரிக்கப் புலனாய்வு


உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளைக் காண்பதற்கு ரஷ்யா செல்லும் அமெரிக்கர்கள், மின்னியல் சாதனங்களை எடுத்துச் செல்ல வேண்டாம் என அமெரிக்கப் புலனாய்வு உயர் அதிகாரி ஆலோசனை கூறியுள்ளார்.

அவற்றைக் குற்றவாளிகள் அல்லது ரஷ்ய அரசாங்கம் ஊடுருவக் கூடும் என்று அமெரிக்கப் புலனாய்வு, பாதுகாப்பு நிலைய இயக்குநர் வில்லியம் எவனினா (William Evanina) எச்சரித்தார்.

அதனால் காற்பந்துப் போட்டிகளைக் காணச்செல்வோர் கூடுமானவரை மின்னியல் சாதனங்களை எடுத்துச் செல்வதைத் தவிர்க்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

தனியார் துறையையும் அரசாங்கத்தையும் சேர்ந்த அதிகாரிகள் அதிக ஆபத்துக்கு உள்ளாகும் நிலையில் இருந்தபோதும் எவர் வேண்டுமானாலும் பாதிக்கப்படலாம் என்று அவர் கூறினார்.
 

உங்கள் கருத்து

Top