Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

கத்தார் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகள் நடைபெறவுள்ள அரங்கத்தைக் காணக் குவிந்த மக்கள்

கத்தாரில் 2022ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளுக்காகவே கட்டப்பட்ட அரங்கத்தைப் பார்க்க நேற்று ரசிகர்கள் அலைமோதினர்.

வாசிப்புநேரம் -
கத்தார் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகள் நடைபெறவுள்ள அரங்கத்தைக் காணக் குவிந்த மக்கள்

படம்: AFP

கத்தாரில் 2022ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளுக்காகவே கட்டப்பட்ட அரங்கத்தைப் பார்க்க நேற்று ரசிகர்கள் அலைமோதினர்.

40,000 ரசிகர்களை ஏற்றுக்கொள்ளும் ஆற்றல் படைத்த அல்-வக்ரா (Al-Wakrah) விளையாட்டு அரங்கம் கிட்டத்தட்ட 575 மில்லியன் டாலர் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.

கத்தாரைச் சேர்ந்த இரு உள்ளூர் அணிகள் நேற்று அங்கு இறுதிப் போட்டியில் மோதிக்கொண்டன.

ஆட்டம் தொடங்குவதற்கு முன்னரே அரங்கம் கிட்டத்தட்ட முழுவதும் நிரம்பியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கலை நிகழ்ச்சி, ஒளிக்கற்றைப் படைப்பு போன்றவை ரசிகர்களைப் பெரிதும் ஈர்த்தன.

விளையாட்டு அரங்கத்தின் வடிவமைப்பு வித்தியாசமானதாகவும், தனித்தன்மை வாய்ந்ததாகவும் இருப்பதாக ரசிகர்கள் கூறினர்.

பிரிட்டிஷ் ஈராக்கியரான மறைந்த திருமதி ஸாஹா ஹடீட் (Zaha Hadid) அதை வடிவமைத்துள்ளார்.

2016இல் தமது 65ஆவது வயதில் மறைந்த அவரது கடைசிக்கால வடிவமைப்புகளில் இந்த விளையாட்டரங்கமும் ஒன்று.   

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்