Images
  • World Cup
    (படம்: AP Photo/Natacha Pisarenko)

உலகக் கிண்ணம்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ள பிரான்ஸ்

பிரான்ஸ், உலகக் கிண்ணக் காற்பந்தாட்டத்தின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

இன்று (ஜூலை 11) காலை, ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் (Saint Petersburg) விளையாட்டரங்கில் நடந்த அரையிறுதிச் சுற்றில் பிரான்ஸ், பெல்ஜியம் (France, Belgium) அணியை ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது.

ஆட்டத்தின் முதல் பாதியில், இரு அணிகளும் கோல்கள் போடாத நிலையில், ஆட்டத்தின் இரண்டாம் பாதியில், பிரெஞ்சு ஆட்டக்காரர் சாமுவேல் ஊம் டி டி (Samuel Oom Ti Ti), தமது அணிக்கான முதல் கோலைப் போட்டார்.

உலகக் கிண்ணக் காற்பந்தாட்டத்தின் மாபெரும் இறுதிச் சுற்றில், பிரான்ஸ் அணி இங்கிலாந்து அல்லது
குரோசியா (Croatia) அணியைச் சந்திக்கும். அந்த இறுதிச் சுற்றுக்கான போட்டி, வரும் ஞாயிற்றுக்கிழமை, ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் (Moscow) உள்ள லுஸ்னிக்கி (Luzhniki) விளையாட்டரங்கில் நடைபெறவிருக்கின்றது. 

Top