Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

உடற்குறையுள்ளோருக்கான உலக நீச்சல் போட்டியை நடத்தும் வாய்ப்பை இழந்தது மலேசியா

மலேசியா: உடற்குறையுள்ளோருக்கான இவ்வாண்டின் உலக நீச்சல் போட்டிகளை நடத்தும் வாய்ப்பை மலேசியா இழந்துள்ளது .

வாசிப்புநேரம் -
உடற்குறையுள்ளோருக்கான உலக நீச்சல் போட்டியை நடத்தும் வாய்ப்பை இழந்தது மலேசியா

(படம்: World Para Swimming via Facebook)

மலேசியா: உடற்குறையுள்ளோருக்கான இவ்வாண்டின் உலக நீச்சல் போட்டிகளை நடத்தும் வாய்ப்பை மலேசியா இழந்துள்ளது .

உடற்குறையுள்ளோருக்கான போட்டிகளின் அனைத்துலகக் குழு இன்று (ஜனவரி 27) அதன் முடிவை அறிவித்தது.

போட்டியில் இஸ்ரேலிய விளையாட்டுத் திறனாளர்கள் பங்கேற்க மலேசியா தடை விதித்ததைத் தொடர்ந்து அது அவ்வாறு கூறியுள்ளது.

விளையாட்டு தொடர்பான முடிவுகளில் அரசியலுக்கு இடமிருக்கக்கூடாது என்று குழு தெரிவித்தது.

2020இல் ஜப்பானின் தோக்கியோ நகரில் இடம்பெறவுள்ள போட்டிகளுக்கான தகுதிச் சுற்று இது.

ஜூலை 29இலிருந்து ஆகஸ்ட் 4இற்கு இடைப்பட்ட காலத்தில் மலேசியாவின் குச்சிங் (Kuching) நகரில் போட்டிகள் இடம்பெற இருந்தன.

உடற்குறையுள்ளோருக்கான போட்டிகளின் அனைத்துலகக் குழு போட்டியை நடத்த இப்பொழுது வேறு இடத்தைப் பரிசீலனை செய்து வருவதாக தெரிவித்துள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்