Images
  • wwe
    படம்: Screengrab - YouTube/WWE

WWE போட்டியில் களமிறங்கிய சிங்கப்பூர் வீரர் ஒரே நிமிடத்தில் வெற்றி கண்டார்

WWE உலக மல்யுத்தப் போட்டியில் கலந்துகொண்டுள்ள முதல் சிங்கப்பூர் மல்யுத்த வீரர் ஷான் டான் (Sean Tan) ஒரே நிமிடத்தில் வெற்றி கண்டுள்ளார்.

தம்மை எதிர்த்துக் களமிறங்கிய டிரே பாக்ஸ்டரை (Trey Baxter) அவர் தோற்கடித்தார்.

டான்டே சென் (Dante Chen) என மல்யுத்தக் களத்தில் தம்மை அழைத்துக்கொள்கிறார், 25 வயது டான்.

அவர் சிங்கப்பூரில் பிறந்த முதல் WWE போட்டியாளர் என்பதை போட்டி நிகழ்ச்சியின் வர்ணனையாளர் அறிவித்திருந்தார்.

அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் (Florida) உள்ள WWE பயிற்சி நிலையத்தில் பயிற்சி மேற்கொள்ளத் தகுதிபெற்ற ஆசிய மல்யுத்த வீரர்களில் டானும் ஒருவர்.

Top