Images
  • Sport

உலக நீச்சல் போட்டியில் சிங்கப்பூருக்கு முதல் தங்கம் வென்ற யிப் பின் சியூ

விளையாட்டு, உடற்குறையுள்ளோருக்கான உலக வெற்றியாளர் நீச்சல் போட்டி.

மகளிருக்கான 100 மீட்டர் மல்லாந்த நீச்சலில், சிங்கப்பூரின் யிப் பின் சியூ (Yip Pin Xiu) தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.

சிங்கப்பூருக்கான முதல் தங்கப்பதக்கம் அது.

27 வயது Yip, பந்தயத்தின் தொடக்கத்தில் இருந்தே முன்னணி வகித்திருந்தார்.

நாளை நடைபெறவிருக்கும் 50 மீட்டர் நீச்சல் போட்டியிலும் அவர் பங்கேற்கவிருக்கிறார்.

சிங்கப்பூர் நீச்சல் அணி, மற்ற 9 பிரிவுகளில் களமிறங்குகிறது. 

Top