Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

அடுத்த S-League பருவத்தில் பல்வேறு மாற்றங்கள்: சிங்கப்பூர்க் காற்பந்துச் சங்கம்

அவற்றுள் தலையாயது "இளையர் மீது அதிக கவனம் " என்பதாகும்.  Young Lions காற்பந்துக்குழு தவிர்த்து S-Leagueஇல் உள்ள ஒன்பது உள்ளூர்க் குழுக்கள் ஒவ்வொன்றிலும் 23 வயதுக்கு உட்பட்ட விளையாட்டாளர்களில் குறைந்தது 6 உள்ளூர் ஆட்டக்காரர்கள் இடம்பெற்றிருக்க வேண்டும். 

வாசிப்புநேரம் -
அடுத்த S-League பருவத்தில் பல்வேறு மாற்றங்கள்: சிங்கப்பூர்க் காற்பந்துச் சங்கம்

(படம்:Justin Ong)

சிங்கப்பூர் காற்பந்துச் சங்கம் அடுத்த ஆண்டின் S-League காற்பந்துப் பருவத்தில் பல்வேறு மாற்றங்களைச் செய்யவிருப்பதாக அறிவித்துள்ளது.

அவற்றுள் தலையாயது "இளையர் மீது அதிக கவனம் " என்பதாகும்.

Young Lions காற்பந்துக்குழு தவிர்த்து S-Leagueஇல் உள்ள ஒன்பது உள்ளூர்க் குழுக்கள் ஒவ்வொன்றிலும் 23 வயதுக்கு உட்பட்ட விளையாட்டாளர்களில் குறைந்தது 6 உள்ளூர் ஆட்டக்காரர்கள் இடம்பெற்றிருக்க வேண்டும்.

அவர்களில் மூவர் ஆட்டத்தின் தொடக்கத்திலேயே இடம்பெற்றிருக்கவேண்டும்.

ஒவ்வொரு குழுவிலும் 2 வெளிநாட்டு விளையாட்டாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

அடுத்த ஆண்டின் S-League காற்பந்துப் போட்டிகள் மார்ச் 31ஆம் தேதி தொடங்கி அக்டோபர் மாதம் நிறைவடையும்.

ஆசியான் காற்பந்துச் சம்மேளனக் கிண்ணக்காற்பந்துப்போட்டிகளுக்கு விளையாட்டாளர்கள் ஆயத்தப்படுத்திக்கொள்ள, அது போதிய அவகாசம் அளிக்கும் என்று சிங்கப்பூர் காற்பந்துச் சங்கம் கூறியது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்