Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

ஒலிம்பிக் சுவாரஸ்யங்கள்: ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற ஆக இளையவர்- வயது 10

தோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியுள்ளன. அதையொட்டி, ஒலிம்பிக் விளையாட்டுகளில் இதுவரை நடந்த சில சுவாரஸ்யமான தகவல்கள் 'செய்தி' ரசிகர்களுக்காக...

வாசிப்புநேரம் -

தோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியுள்ளன. அதையொட்டி, ஒலிம்பிக் விளையாட்டுகளில் இதுவரை நடந்த சில சுவாரஸ்யமான தகவல்கள் 'செய்தி' ரசிகர்களுக்காக...

ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற ஆக இளையவர், கிரீஸைச் சேர்ந்த டிமிட்ரியோஸ் லவுண்ட்ராஸ் (Dimitrios Loundras).

1896ஆம் ஆண்டில் ஏதன்ஸில் (Athens) நடைபெற்ற முதல் நவீன ஒலிம்பிக் போட்டிகளில் அவர் கலந்துகொண்டார்.

அப்போது அவருக்கு வயது 10.

Parallel bars எனும் சீருடற்பயிற்சியின் இணைச் சட்ட விளையாட்டுக் குழுப் போட்டியில் கலந்துகொண்ட அவர், வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

அவர் 1970ஆம் ஆண்டில் காலமானார்.

1896ஆம் ஆண்டு ஏதன்ஸ் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொண்டு, 1970 வரை உயிரோடு இருந்த ஒரே நபரும் அவரே.

தோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளை நேரடியாக meWATCH தளத்தின் 14 பிரத்தியேக ஒளிவழிகளில் காணலாம்.

meWATCH.sg/tokyo2020 என்ற இணையப்பக்கத்தை நாடுங்கள்; சிங்கப்பூரின் ஒலிம்பிக் கட்டமைப்பான மீடியாகார்ப்புடன் இணைந்திருங்கள்! 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்