Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

மாணவர்களுக்கான நாடகப் பயிலரங்கு

மாணவர்களின் தமிழ் மொழி வளத்தைப் பெருக்க நாடகம் நல்லதொரு வழி.

வாசிப்புநேரம் -

மாணவர்களின் தமிழ் மொழி வளத்தைப் பெருக்க நாடகம் நல்லதொரு வழி.

அத்தகைய முயற்சியை எடுத்துள்ளது, ஏ.கே.டி. கிரியேஷன்ஸ் நாடகக் குழு.

அது தொடக்கப்பள்ளி மாணவர்களுக்காக நாடகப் பயிரலங்கு ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது. 

அது பற்றி மேல் விவரம் அறிந்து வந்தார் எமது நிருபர் யாஸ்மின் பேகம்.

தமிழ் மொழி விழாவை ஒட்டி இன்று மதியம் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நாடகப் பயிலரங்கு நடைபெற்றது.

மாணவர்கள் குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர். 

அவர்களுக்குப் பல்வேறு சூழ்நிலைகள் கொடுக்கப்பட்டன.

மாணவர்கள், அவற்றுக்கேற்ப கதையை அப்போதே உருவாக்கினர். 

வசனங்களைச் சேர்த்தனர். 

நடித்தும் காட்டினர். 

மாணவர்களின் கற்பனைத் திறனையும் மொழி ஆற்றலையும் வளர்ப்பது பயிலரங்கின் நோக்கம்.

பயிற்றுவிப்பாளர்களுக்கு இந்தத் துறையில் பல்லாண்டு அனுபவம் உண்டு.

மாணவர்களுக்கோ இது புதிது. 

ஆனாலும் தயக்கத்தைப் பின்னுக்குத் தள்ளி தன்னம்பிக்கையுடன் முன்னுக்கு வந்தனர் மாணவர்கள். 

பல்வேறு அம்சங்களைக் கற்றுக்கொடுத்தது பயிலரங்கு. 

மாணவர்கள் பல வழிகளில் பயனடைந்தனர் என்பது ஆசிரியர்களின் கருத்து. 

பயிரலங்கின் இறுதி அங்கமாக, மாணவர்களுக்குப் போட்டி ஒன்றும் நடத்தப்பட்டது. 

இரண்டு வார்த்தைகளைக் கொண்டு ஒரு கதையை அவர்கள் அமைக்கவேண்டும்.

பயிலரங்கில் கற்றவற்றைக் கொண்டு அவர்கள் நடித்துக்காட்ட வேண்டும். 

நாடகப் பயிரலங்கில் 9 பள்ளிகளை சேர்ந்த 36 மாணவர்கள் கலந்துகொண்டனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்