Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

மெய்நிகர் உலகில் புத்தாக்கத் தமிழ்

தொன்மையும், பெருமையும் கொண்ட தமிழ்மொழியின் புழக்கத்தை இளைய தலைமுறையினரிடையே ஊக்குவிக்க அதிநவீன முறைகளைக் கையாள முனைகிறது "மெய்நிகர் உலகில் புத்தாக்கத் தமிழ்" எனும் நிகழ்ச்சி.

வாசிப்புநேரம் -

தொன்மையும், பெருமையும் கொண்ட தமிழ்மொழியின் புழக்கத்தை இளைய தலைமுறையினரிடையே ஊக்குவிக்க அதிநவீன முறைகளைக் கையாள முனைகிறது "மெய்நிகர் உலகில் புத்தாக்கத் தமிழ்" எனும் நிகழ்ச்சி.

இன்று (15 ஏப்ரல் 2017) பிற்பகல் PIXEL Studio வில் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிலர், Unity - மெய்நிகர்த் தொழில்நுட்ப

மென்பொருளைக் கொண்டு தமிழ் தொடர்பான படைப்புகளை அறிமுகப்படுத்தினர்.

தலைசிறந்த 3 புத்தாக்கப் படைப்புகள், வரும் ஆகஸ்ட் மாதம் ஜெர்மனியில் நடைபெறவிருக்கும் Gamescom 2017 தொழில்நுட்ப மாநாட்டில் இடம்பெறும்.

தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையமும் தேசிய கலைகள் மன்றமும் அந்த முயற்சிக்கு மானியம் வழங்கி உதவும்.

வித்தியாசமான இந்த நிகழ்ச்சியின் மூலம் தொழில்நுட்ப உலகைப் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்ததாகப் பங்கேற்பாளர்கள் சிலர் கூறினர்.

தொழில்நுட்பத்தின் துணையோடு வருங்காலத் தலைமுறையினரிடம் தமிழை எளிதில் கொண்டுசேர்க்க முடியும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்