Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பிள்ளைகளுக்குத் தமிழைக் கற்பிக்கப் பெற்றோருக்குப் பாடம்

கற்றலுக்கு ஒருபோதும் வயது தடையல்ல. ஏட்டுக்கல்விக்கு மாற்றாக இயல், இசை, நாடகம் மூலம் தமிழ் கற்றுக்கொடுக்கும் முயற்சியை மேற்கொண்டது கல்சா பாலர் பள்ளி.

வாசிப்புநேரம் -

கற்றலுக்கு ஒருபோதும் வயது தடையல்ல.

ஏட்டுக்கல்விக்கு மாற்றாக இயல், இசை, நாடகம் மூலம் தமிழ் கற்றுக்கொடுக்கும் முயற்சியை மேற்கொண்டது கல்சா பாலர் பள்ளி.

கற்றுக் கொண்டது சிறுவர்கள் அல்லர். பெற்றோர்.

உமறுப்புலவர் தமிழ் மொழி நிலையத்தில் நடைபெற்றது பயிலரங்கு.

வீட்டில் பிள்ளைகளுக்குத் தமிழ் கற்றுக்கொடுக்கும் உத்திகளை பெற்றோர் அறிந்து கொண்டனர்.

குறிப்பாகப் பாலர் பள்ளியில் பயிலும் பிள்ளைகளுக்குப் பாடங்களைக் கற்பிப்பது சவாலான பணி.

பிள்ளைகளைக் கட்டாயப்படுத்தாமல் அவர்களோடு சேர்ந்து நாமும் விளையாட்டின் மூலம் கற்பித்தால் பிள்ளைகள் பாடங்களை எளிமையாகப் புரிந்து கொள்வர்.

பயிலரங்கில் பங்கேற்ற பெற்றோர் பிள்ளைகளாகவே மாறிவிட்டனர்.

பழக்க வழக்கங்கள், நன்னெறிகள், புதிய சொற்கள் போன்றவற்றை பாடல்களின் மூலம் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்கும் உத்திகளைப் பெற்றோர் தெரிந்து கொண்டனர்.

பெற்றோரும் பிள்ளைகளும் தமிழ் மொழியைப் புதுபுது வழிகளில் கற்க வகை செய்கின்றன இதுபோன்ற பயிலரங்குகள். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்