Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

உலகளாவிய அரங்கத்திற்கு செல்லவிருக்கும் தமிழ் பேச்சாளர் மன்றங்கள்

சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் தமிழ் பேச்சாளர் மன்றங்கள் அவற்றின் தடங்களை அமெரிக்கா, கனடா போன்ற வெளிநாடுகளிலும் பதிக்க முயற்சிகளை எடுத்து வருகின்றன.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் தமிழ் பேச்சாளர் மன்றங்கள் அவற்றின் தடங்களை அமெரிக்கா, கனடா போன்ற வெளிநாடுகளிலும் பதிக்க முயற்சிகளை எடுத்து வருகின்றன.

இன்று உமறு புலவர் அரங்கத்தில் நடைபெறும் தயாரிக்கப்பட்ட மற்றும் அரங்கப் பேச்சுப் போட்டிகளில், மண்டலம் 80 மன்ற வளர்ச்சி இயக்குநர் திரு மு. ஹரிகிருஷ்ணன் அதை தெரிவித்தார்.

தமிழ்ப் பேச்சாளர் மன்றங்கள் ஏற்பாடு செய்திருந்த போட்டிச் சுற்றுகளில் இருந்து பத்துக்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

நிகழ்ச்சியில்,எட்டு போட்டியாளர்கள் திட்டமிட்ட பேச்சு போட்டியில் அவர்களின் கருத்துகளை முன்வைத்தனர்.

கல்யாணம் முதல் காதல் வரை, வாழ்க்கையின் ரகசியம் போன்ற தலைப்புகளில் திட்டமிட்ட பேச்சு போட்டியில் பார்வையாளர்களை ஈர்த்தனர்.

நிகழ்ச்சியில் மாணவர்கள் மூவரும் தன்னம்பிக்கை, இளையரும் இணையமும், தாய்நாடு என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினர்.

தமிழ் மொழி மாதத்தின் ஓர் அங்கமாக   நடக்கும் போட்டி, இரண்டு பிரிவுகளாக நடக்கிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்